பிலிப்பீன்ஸ் அதிபர் பெயரில் ஆர்க்கிட்

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் வருகையளித்த பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே நேற்று தாயகம் புறப்பட்டார். சிங்கப்பூர் அதிபர் டாக்டர் டோனி டான் கெங் யாம் அழைப் பின் பேரில் இங்கு வந்த அவர், டாக்டர் டானையும் பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூர் தொழில்துறைத் தலைவர்களையும் சந்தித்தார். சிங்கப்பூர் பூமலையில் ஒரு ஆர்க்கிட் மலருக்கு பிலிப்பீன்ஸ் அதிபரின் பெயர் சூட்டப்பட்டது. திரு டுட்டர்டே நேற்று எக்ஸ் போவில் சிங்கப்பூரில் வசிக்கும் பிலிப்பீன்ஸ் சமூகத்தினரைச் சந் தித்தார். தங்கள் அதிபரை காண் பதற்காக பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த சுமார் 5,000 பேர் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் எக்ஸ்போவில் திரண்டனர். ஆடல், பாடல்களில் மகிழ்ந்தனர். அங்கு பேசிய அதிபர், போதைப்பொருளுக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என்றார்.

பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டேயின் பெயர் பூமலையில் நேற்று ஓர் ஆர்க்கிட் செடிக்குச் சூட்டப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் (இடமிருந்து) தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், பிலிப்பீன்ஸ் அதிபர், தேசிய பூங்கா கழகத்தின் தலைமை அதிகாரி கென்னத் எர் ஆகியோர். படம்: தேசிய பூங்கா கழகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!