மாணவர்கள் கைக்காசு நிதிக்கு $114,797 திரண்டது

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மாணவர் கைக்காசு நிதித் திட்டத்துக்குப் போக்குவரத்து அமைச்சு நேற்று $114,797 திரட்டித் தந்தது. அமைச்சின் ஆணை பெற்ற அமைப்புகளும் டாக்சி நிறுவனங் களும் தேசிய டாக்சி சங்கமும் சேர்ந்து நேற்று அறப்பணி காற் பந்து விளையாட்டை நடத்தின. 'உதவுவதற்காக விளையாடு வோம்' என்ற அந்த நிகழ்ச்சியில் முன்னாள் தேசிய காற்பந்து வீரர் லிம் தோங் ஹாய், எப் 17 பயிலகத்தின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஹபில் ஹக்கிம் ஆகியோர் போக்குவரத்து நிறுவனங்கள், ஆணையங்கள், சங்கங்களைச் சேர்ந்த விளையாட்டாளர்களுடன் சேர்ந்து விருப்பத்துடன் பங்கெடுத் துக்கொண்டனர். கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங் சிறப்பு விருந்தி னராகக் கலந்துகொண்டார். கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி, பிரிமியர் டாக்சி, பிரைம் கார் ரெண்டல் & டாக்சி சர்வீசஸ், எஸ்எம்ஆர்டி டாக்சிஸ், டிரான்ஸ்= கேஃப் சர்வீசஸ் ஆகியவை இந்த நிதி திரட்டு முயற்சிக்கு வலுவான ஆதரவு வழங்கின.

இரண்டாம் போக்குவரத்து அமைச்சர் இங் சீ மெங் (இடது) , நேற்று டாக்சி நிறுவனங்கள், தேசிய டாக்சி சங்கம், போக்குவரத்து அமைச்சு, நிலப் போக்குவரத்து ஆணையம், பொதுப்போக்குவரத்து மன்றம் ஆகியவற்றைச் சேர்ந்த விளையாட்டாளர்களோடும் முன்னாள் தேசிய காற்பந்து வீரர் லிம் தோங் ஹாயுடனும் சேர்ந்து காற்பந்து விளையாடினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!