சமூக மீள்திறனைப் பலப்படுத்த உறுதி

சிங்கப்பூர் செஞ்சிலுவை இளையர் சங்கம் தன்னுடைய 65வது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் வகையில் நேற்று சமூகத்திற்கு உதவும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு உறுதி அளித்தது. ரத்த நன்கொடை திரட்டவும் வசதி குறைந்தோருக்கு உதவவும் அவசர காலங்களை, பேரிடர்களைச் சமாளிக்க எப்படியெல்லாம் ஆயத்தமாகலாம் என்பது பற்றி பொதுமக்களுக்குப் போதிக்கவும் அது உறுதி கூறியிருக்கிறது.

கலாசார, சமுதாய அமைச்சுக்கான நாடாளுமன்ற செயலாளர் சமூக மீள்திறனைப் பலப்படுத்த உறுதி செஞ்சிலுவை இளையர் சங்க நிகழ்ச்சியில் மாதிரி ரத்த ஒப்பனையைச் செய்து பார்க்கிறார் கலாசார, சமுதாய அமைச்சுக்கான நாடாளுமன்ற செயலாளர் பே யாம் கெங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பே யாம் கெங் தலைமையில் 'தெம்பனிஸ் ஹப்' இடத்தில் நேற்று நடந்த சமூக நிகழ்ச்சியில் இந்த உறுதி தெரிவிக்கப்பட்டது. "உலகம் முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. ஆகையால் சிங்கப்பூர் எப்போதுமே விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஆயத்தமாக இருக்க வேண்டும். சமூகத்தில் ஆயத்தமாக நாம் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த எல்லாருக்கும் பொறுப்பு இருக்கிறது. "ரத்த நன்கொடை, முதலுதவி பயிற்சி மூலம், ஒருவர் மற்றொருவரை கவனித்துக் கொள்வதன் மூலம் சமூகத்தின் மீட்சித்திறனைப் பலப்படுத்துவதில் செஞ்சிலுவை இளையர் சங்கம் ஊக்க சக்தியாக செயல்படும் என்று நான் நம்புகிறேன்," என அந்த நிகழ்ச்சியில் பேசிய திரு பே குறிப்பிட்டார்.

செஞ்சிலுவை இளையர் சங்க நிகழ்ச்சியில் மாதிரி ரத்த ஒப்பனையைச் செய்து பார்க்கிறார் கலாசார, சமுதாய அமைச்சுக்கான நாடாளுமன்ற செயலாளர் பே யாம் கெங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!