புதிய தெம்பனிஸ் பேருந்து சந்திப்பு நிலையம் அதிக இடவசதியுடன் இருப்பதுடன் பயணிகளுக்கு கூடுதல் பேருந்து சேவைகளையும் வழங்குகிறது. நேற்றுத் திறக்கப்பட்ட இந்தப் புதிய பேருந்து சந்திப்பு நிலையம், ஏற்கெனவே உள்ள பேருந்து சந்திப்பு நிலையத் துடன் இணைந்து சேவையாற்றும். இரண்டு பேருந்து சந்திப்பு நிலையங்களும் 250 மீட்டர் கூரை போடப்பட்ட பாதையில் இணைக்கப்பட்டுள்ளன. புதிய நிலையத்தில் 12 பேருந்து நிறுத்துமிடங்களும் பயணிகள் ஏறுவதற்கு இரண்டு மேடைகளும் உள்ளன.
தற்போது இந்தப் புதிய நிலையத்தில் இருந்து பேருந்து எண்கள் 129, 18, 39 ஆகியவை சேவை வழங்கும். மேலும் சக்கர நாற்காலி பயன் படுத்துவோருக்காக தனியான பேருந்து ஏறுமிடம், முதியோர், ஊனமுற்றோருக்காக இருக் கையுடன் கூடிய பிரத்தியேக வரிசை போன்றவையும் இந்த நிலையத்தில் அமைக்கப் பட்டுள்ளன. முதல் சில நாட்களுக்கு பய ணிகளுக்கு உதவ 40 கூடுதல் எஸ்பிஎஸ் டிரான்சிட் ஊழியர்கள் பணியில் இருப்பர்.