மின்னிலக்க ஆவணமான சிங்கப்பூரின் தமிழ்

ப. பாலசுப்பிரமணியம்

சிங்கப்பூரில் அன்றாட வாழ்வில் புழங்கும் தமிழை ஆவணப்படுத்தி, பாதுகாத்து, எதிர்காலச் சந்ததிக்கு எடுத்துச் செல்லும் பெரு முயற்சியில் இறங்கியுள்ளது தமிழ் மின்மரபுடைமைத் திட்டக் குழு. சிங்கப்பூரின் தமிழ் மொழி பயன்பாட்டைப் பொதுப் பதிவேட் டில் ஆவணப்படுத்தும் இணையத் தளமான 'சிங்கப்பூர் தமிழ் 2015' நேற்று அதிகாரத்துவ துவக்கம் கண்டது. www.singaporetamil2015.sg எனும் இந்த இணையத் தளத்தில் சிங்கப்பூரின் பொது இடங்களில் தமிழில் இடம்பெற்றுள்ள 250க்கும் மேற்பட்ட அறிவிப்புகள், வழி காட்டிகள் போன்றவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2016 ஆகஸ்ட் மாதம் 'singaporetamil2015' இணையப் பக்கம் உருவாக்கப்பட்டு, இந்நாட் டில் பொது இடங்களில் காணப் படும் தமிழைப் பதிவேற்றம் செய்யும் முயற்சி தொடங்கப்பட்டது.

அவ்வாறு சேகரிக்கப்பட்ட பதிவுகளில் முக்கியமாவற்றைத் தேர்ந்தெடுத்து குறிப்புரை எழுதும் பணியை தமிழ் மின்மரபுடைமைத் திட்டக் குழு இவ்வாண்டுத் தொடக்கத்தில் மேற்கொண்டது. ஏப்ரல் மாதம் முதல் இதனை தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி களுக்கு கொண்டுசெல்லும் உத்திகள் குறித்து ஆராயப்பட்டன.

'சிங்கப்பூர் தமிழ் 2015' அறிமுக நிகழ்ச்சியில் கேள்விகளுக்கு பதிலளித்த (இடமிருந்து) நாடகக் கலைஞர் திரு சுப்ரமணியன் கணேஷ், குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு ரா.கார்த்திகேயன், குழுவின் துணை ஒருங்கிணைப்பாளர் திரு செம்பியன் சோமசுந்தரம், திட்ட ஆலோசகர் திரு அருண் மகிழ்நன். விக்டோரியா ஸ்திரீட், தேசிய நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். கல்வி அமைச்சின் தாய்மொழிகள் பிரிவுக்கான துணை இயக்குநர் திருவாட்டி சாந்தி செல்லப்பன் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்பித்தார். படம்: சிங்கப்பூர் தமிழ் 2015

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!