ஆண்டின் சிறந்த பணிப்பெண் விருதை வென்ற இந்திராணி

இலங்கையைச் சேர்ந்த திருமதி பி.ஜி. இந்திராணி ஃபெர்னாண்டோ 23 ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூருக்கு வந்தபோது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைகூட பேசத் தெரியாது. தமது முதலாளிகளான திருவாட்டி வேரா பாலகிருஷ்ணன், திரு விக்டர் சியா ஆகியோரின் உதவியாலும் ஊக்குவிப்பிலும் தற் போது திருமதி இந்திராணி ஆங்கிலத்தில் பேசுவதுடன், மளிகைப் பொருட்கள் பட்டியலை ஆங்கிலத்தில் சுயமாகவே எழுதுகிறார்.

முதல்படியாக, மேசை, நாற்காலி போன்ற வீட்டுப் பொருட்கள் மீது அவர்கள் ஆங்கிலத்தில் பெயர் எழுதி ஒட்டிவைத்தனர். இவ்வாறு படிப்படியாக அவருக்கு ஆங்கிலச் சொற்களை அறிமுகப்படுத்தினர். மூன்று பிள்ளைகள் உள்ள சியா குடும்பத்துக்கு வீட்டு வேலை களைச் செய்யும் பணிப்பெண் ணாக மட்டுமின்றி, வயதானவர்க ளையும் பிள்ளைகளையும் நன்கு கவனித்துக்கொள்பவராகவும் நல்ல சமையல்காரராகவும் திறன் மிக்க பணியாளராகவும் உள்ள திருமதி இந்திராணியின் முயற் சியை அங்கீகரிக்கும் வகையில் திருவாட்டி பாலகிருஷ்ணன் இவரை இவ்வாண்டுக்கான சிறந்த வெளிநாட்டுப் பணிப்பெண் விருதுக்கு நியமித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!