ஊழியர்களை அதிகரிக்க சிங்கப்பூர் முதலாளிகள் திட்டம்

அடுத்த ஆண்டில் சிங்கப்பூரில் உள்ள கிட்டத்தட்ட 37 விழுக்காடு நிறுவனங்கள் தங்களது ஊழியர் எண்ணிக்கை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன. அண்மையில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. மைக்கல் பேஜ் என்ற வேலைக்கு ஆள் அமர்த்தும் நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டது. இதில் பலதுறைகளைச் சேர்ந்த 450 முதலாளிகளிடம் கருத்துகள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆய்வில் பங்கேற்ற நிறு வனங்கள் அனைத்தும் ஊழியர் களின் எண்ணிக்கையை அதி கரிக்க எண்ணியிருப்பதாகக் கூறியுள்ளன. பத்தில் ஆறு நிறுவனங்கள் நிர்வாக நிலையில் வேலைக்கு ஆட்களை அமர்த்தவும் பரிசீலித்து வருகின்றன. எனினும், அடுத்த ஆண்டின் வேலை வாய்ப்பு நிலவரம் இந்த ஆண்டைப் போலவே மந்தமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது என்று மைக்கல் பேஜ் நிறுவனத்தின் திரு ஆண்டனி தாம்சன் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!