கடன்முதலை நடவடிக்கைகள்: ஆடவர் கைது

கடன்முதலை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் சந்தேகத்தின் பேரில் 26 வயது ஆடவர் ஒருவரை போலிஸ் கைது செய்துள்ளது. இம்மாதம் 6ஆம் தேதி, பிடோக் சவுத்தில் உள்ள வீவக வீடு ஒன் றில் கடன்முதலை தொல்லை பற்றி போலிசுக்கு புகார் கிடைத் தது. சந்தேக நபர் அந்த வீட்டின் முன் இரும்புக் கதவை சைக்கிள் பூட்டு கொண்டு பூட்டியதுடன் அந்த வீட்டுக்கு வெளியே கட னைத் திருப்பி செலுத்து எனும் வாசகத்தை சாயத் தெளிப்பான் மூலம் எழுதியிருந்தான். போலிஸ் கண்காணிப்பு கேம ராக்களில் பதிவான காணொளிக ளைக் கொண்டு பிடோக் போலிஸ் பிரிவின் அதிகாரிகள் அந்தப் பகுதியில் வசிப்பவர்களிடம் நடத் திய விசாரிப்புகளுக்குப் பிறகு அந்தச் சந்தேக நபரை இம்மாதம் 19ஆம் தேதியன்று பூன் லே பகுதியில் கைது செய்தனர்.

அந்த நபர் பல்வேறு கடன் முதலை தொல்லை சம்பவங்களி லும் ஈடுபட்டிருந்ததாக போலிசின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்தது. கடன்கொடுப்போர் சட்டத்தின் அடிப்படையில் அந்த சந்தேக நபர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். கடன்முதலை தொல்லை கொடுத்தல் குற்றத்துக்குக் கடன் கொடுப்போர் சட்டத்தின்படி முதல் முறை குற்றம் புரிவோருக்கு ஐந்து ஆண்டு வரை சிறை, $5,000க்குக் குறையாத $50,000க்கு மேற் போகாத அபராதம், மூன்றுக்குக் குறையாத பிரம்படி ஆகியவை தண்டனையாக விதிக்கப்படலாம் என்று போலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!