இயலாதோருக்கான 3வது தேசிய திட்டம் அறிவிப்பு

இயலாமை உள்ளோருக்காக 2017 முதல் 2021 வரை மேற்கொள்ளப் படும் முயற்சிகளுக்கு வழிகாட் டும் மூன்றாவது தேசிய பெருந் திட்டத்தின் விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. திட்டத்தை வகுத்த நிபுணர் குழுவினர் 20 பரிந்துரைகளை வெளியிட்டனர். இயலாமை உள் ளோரின் தேவைகளை மேலும் விரிவாகவும், வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்கள் முழுவதிலும் நிறைவேற்ற, சம்பந்தப்பட்ட அர சாங்க அமைப்புகள் உள்ளடங்கும் இயலாமை அலுவலகம் அமைக் கப்பட வேண்டும் என்ற பரிந்துரை இதில் உள்ளடங்கும். கல்வி, சுகாதாரம், சமூகச் சேவை துறைகளிலும் அவற்றுக்கு இடையிலும் வலுவான பங்காளித் துவம் நிலைப்படுத்தப்பட வேண் டும் என்றும் நிபுணர் குழு கேட்டுக் கொண்டது.

இதன்வழி, சேவை வழங்குநர் கள் செலவைச் சிக்கனப்படுத்தி, தரமான சேவைகளை வழங்கக் கூடிய வளங்களைப் பெற்றிருப்பார் கள். இவ்வாறாக, இயலாமை உள் ளவர்கள் வெவ்வேறு துறைகளில் வழங்கப்படும் சேவைகளைத் தங்குதடையின்றி பெற இயலும். எட்டு மாதகாலம் 400க்கும் மேற்பட்டோரைக் கலந்தாலோசித்த பிறகு வாழ வழிகாட்டும் மூன் றாவது பெருந்திட்டம் நேற்று வெளியிடப்பட்டது. திட்டத்தை வகுத்த நிபுணர் குழுவில் 22 உறுப்பினர்கள் இடம் பெற்றனர். இயலாமை உள்ளவர் கள், அவர்களது பராமரிப்பாளர்கள், சேவை வழங்குநர்கள், அரசாங்க அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அவர் களில் உள்ளடங்கினர்.

இயலாமை உள்ளவர்கள் கூடுதல் காலம் வாழ்தல், 'ஆட்டிஸம்' எனப்படும் மதியிறுக்கப் பிரச்சினை அதிகமானோருக்கு இருத்தல், மூப்படையும் மக்கள் தொகை ஆகிய அந்த மூன்று முக்கிய போக்குகளை மையமாகக் கொண்டு பரிந்துரைகள் வகுக்கப்பட்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!