சுகாதாரமற்ற உணவுக் கடைகளுக்கு எதிராகக் கூடுதல் நடவடிக்கை

சுகாதாரமற்ற உணவு விற்பனையாளர்களுக்கு எதிராகத் தேசிய சுற்றுப்புற வாரியம் இவ்வாண்டு கூடுதல் நடவடிக்கை மேற்கொண்டதாகத் திங்கட்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில், இவ்வாண்டு அதிகமான கண்காணிப்புச் சோதனைகளும் விற்பனையாளர்களுக்கு எதிராகக் கூடுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. தனது அதிகாரிகள் இவ்வாண்டின் முதல் 11 மாதங் களில் 137,000க்கும் மேலான கண்காணிப்புச் சோதனை களை நடத்தியதாகவும் 3,000க்கும் மேற்பட்ட சம்பவங்களில் சுகா தாரமற்ற விற்பனையாளர்களுக்கு எதிராக நடவ டிக்கை எடுத்ததாகவும் வாரியம் தெரிவித்தது.

இதன் விளைவாக, 118 விற்பனையாளர்களின் உரிமங்கள் தற்காலி கமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அறுவரின் உரிமங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்ட 137 விற்ப னையாளர்களைவிட இது சற்றே குறைவு. சென்ற ஆண்டின் முதல் 11 மாதங்களில், சுமார் 136,000 கண்காணிப்புச் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் 2,700க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுக்கு எதிராக நட வடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் வாரியத்தின் அறிக்கை தெரிவித்தது. சுகாதாரமற்ற உணவு விற்பனையாளர்களுக்கு $2,000 வரை அபராதம் விதிக்கப்படுவதோடு அவர்களது உரிமம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படலாம். வாடிக்கையாளர்களின் எண் ணிக்கை அதிகரிக்கக்கூடிய இந்த விழாக்காலத்தில், நல்ல சுகாதாரப் பழக்கங்களை நிலை நாட்டும்படி உணவு விற்பனையாளர்களிடம் வாரியம் கேட்டுக் கொள்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!