ஊழியர்களுக்குச் செலுத்த வேண்டிய மத்திய சேமநிதிச் சந்தா தொகையைக் குறித்த காலத்தில் செலுத்திவிடுங்கள். அப்படி செலுத்தினால்தான் வேலை உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் கொடுக்கும் பணம் உங்களுக்கு வந்து சேரும் என்று முதலாளிகளுக்கு நினைவூட்டப் பட்டு இருக்கிறது.
முதலாளிகள் தங்களுடைய தகுதியுள்ள ஊழியர்களுக்கு உரிய மத்திய சேமநிதிச் சந்தாவை அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதிக்குள் முற்றிலும் செலுத்தி விட வேண்டும். அப்படி செலுத் தினால்தான் அவர்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் நான் காவது தவணைப் பணம் மார்ச் மாதம் கிடைக்கும் என்று தெரிவிக் கப்பட்டு இருக்கிறது.
அரசாங்கத்தின் இந்தத் தொகைக்குத் தகுதிபெற வேண்டு மானால் முதலாளிகள் தங்க ளுடைய சிங்கப்பூரர்களான ஊழி யர்களுக்கு 2016ல் குறைந்தபட்சம் $50 சம்பள உயர்வு அளித்து இருக்க வேண்டும். மற்றும் அல்லது 2015ல் ஊழியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே கொடுத் துள்ள சம்பள உயர்வை (குறைந்த பட்சம் $50) தொடர்ந்து அமல் படுத்தி வரவேண்டும்.