ஓட்டுநருக்கு சிறை

கடந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதியன்று சக ஓட்டுநரைத் தாக்கிய டாக்சி ஓட்டுநருக்கு ஒரு வார சிறைத் தண்டனை யும் $2,500 அபராதமும் விதிக்கப்பட்டது. கோபத்தில் திடீரென்று காயப்படுத்தியதை மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் சூ இங் லாய் சூன், 65, ஒப்புக்கொண்டார். அவரது கோபத்தைத் தூண்டி சண்டைக்கு இழுத்தவர் பாதிக்கப்பட்ட திரு லிம் சீ ஆன், 47. அன்று அதிகாலை 3 மணியளவில் பீச் ரோட்டில் அவரவர் டாக்சிகளைச் செலுத்திக் கொண்டிருந்த போது திரு லிம், சூவை முந்தி அவருக்கு முன்னாள் தமது டாக்சியைத் திடீரென நிறுத்தினார். இரு வாகனங்களுக்கும் சேதம் ஏற்படாவிட்டாலும் சூவிடம் நஷ்டஈடாக குறிப் பிடப்படாத தொகையைத் திரு லிம் கேட்டார். அதைத் தர மறுத்த சூவிடம் திரு லிம் ஆவேசமடைந்து அவரின் தோள்பட்டையைப் பிடித்து இருமுறை தள்ளினார். சூ, கத்தியைக் கொண்டு திரு லிம்மைக் காயப்படுத்தினார். இதில் திரு லிம்முக்கு கழுத்து, நெஞ்சு, கை பாகங் களில் காயம் ஏற்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!