அமைச்சர் ஓங்: உற்பத்தித்திறனும் புத்தாக்கமுமே பொருளியல் மேம்பட வழி

சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச் சியை மனிதவள அதிகரிப்பின் மூலம் சாதித்துவிட முடியாது என்று கல்வி அமைச்சர் (உயர் கல்வி, திறன்கள்) ஓங் யி காங் தெரிவித்து இருக்கிறார். உற்பத்தித்திறன், புத்தாக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பொருளியல் வளர்ச் சியைச் சாதிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார். சிங்கப்பூரின் பொருளியல் தனது அடுத்த கட்டத்திற்கு எப்படி செல்லும் என்பது பற்றிய அரசாங்க அறிக்கை வெளிவர விருக்கிறது. அதைப் பற்றிய ஒரு முன்னோட்ட கருத்தை அமைச்சர் வெளிப்படுத்தினார். சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்பு பல்கலைக்கழகத்தின் புத்தாக்க நகர்களுக்கான லீ குவான் இயூ நிலையம் ஏற்பாடு செய்த அனைத்துலக வட்டமேசை கூட்டத்தில் அமைச்சர் பேசினார். சிங்கப்பூரின் மனிதவள வளர்ச்சிக்கு அதன் சிறிய அளவு வரம்பாக இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர், மக்கள்தொகை போக் கும் தனி அடையாளத்தை கட்டிக் காக்க வேண்டிய தேவையும் இதில் சவாலாக இருக்கின்றன என்றார்.

எதிர்கால பொருளியல் பற்றிய அனைத்துலக வட்டமேசை கூட்டத்தில் உரையாற்றிய கல்வி அமைச்சர் ஓங் யி காங், பிறகு கேள்விகளுக்குப் பதில் அளித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!