ஒர்க் பர்மிட் ஊழியர் வாடகைக்கு வீவக வீட்டை பெற புதிய விதிமுறை

உற்பத்தித் துறையைச் சேர்ந்த மலேசியர்கள் அல்லாத மற்ற வெளிநாட்டு ஒர்க் பர்மிட் ஊழியர்கள் சிங்கப்பூரில் இனிமேல் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீட்டை முழுமை யாக வாடகைக்கு எடுக்க முடியாது. அறைகளை மட்டுமே அவர்கள் வாடகைக்கு எடுக்க முடியும். இந்த விதிமுறை ஜனவரி முதல் தேதி முதல் அமலாகியது. இப்போது வாடகைக்குக் குடியிருப்போர் அனுமதிகாலம் காலாவதி யாகும் வரை தொடர்ந்து இருந்து வரலாம். புதிய விதிமுறை பற்றி லியான்ஹ சாவ் பாவ் சீன மொழி நாளிதழ் தெரிவித்து உள்ளது.

இந்த விதிமுறை தங்கள் வீடுகளை முழுமையாக அல்லது அறைகளை வாடகைக்கு விட்டிருக்கும் சுமார் 3.5% வீவக குடும்பங்களைப் பாதிக்கும் என்று தெரிகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி 52,394 அடுக்குமாடி வீடுகள் முழுமையாக வாடகைக்கு கொடுக்கப் பட்டு இருந்தன. அறைகள் வாடகைக்கு கொடுக்கப்பட்ட வீடுகளைப் பற்றிய புள்ளிவிவரங்களை வீவக வெளியிடுவ தில்லை.

மலேசியர்கள் அல்லாத இதர ஒர்க் பர்மிட் ஊழியர் களின் நலனைக் கருத்தில்கொண்டு கட்டப்படும் விடுதி களில் அவர்களைத் தங்கவைக்க அரசாங்கம் நீண்டகால திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தப் புதிய விதிமுறை இடம்பெறுவதாக வீவக கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!