தனியார் கட்டடங்களுக்குப் புது வடிவமைப்புத் தரங்கள்

சிங்கப்பூரில் புதிதாகக் கட்டப்பட விருக்கும் தனியார் கட்டடங்களில் அமையும் பொது இடங்களுக்கான குறைந்தபட்ச தரங்கள் விரைவில் அமலாகவிருக்கின்றன. இதனையடுத்து அத்தகைய இடங்கள் விசாலமானவையாக இருக்க வேண்டும். அதை எல்லாரும் எட்டக்கூடிய வகையில் அமைக்க வேண்டும். சைக்கிள்களை நிறுத்தி வைப்பதற்கான இடங்களும் அமர்ந்திருப்பதற்கான இருக்கைகள் போன்ற பற்பல வசதிகளும் அத்தகைய இடங் களில் இருக்க வேண்டும். தனியார் கட்டடங்களைக் கட்டி விற்கும் நிறுவனங்களுக்கு ஒரு புதிய சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. நகர மறுசீரமைப்பு ஆணையம் அந்த அறிக்கையை கட்டடக் கலைஞர்களுக்கும் கட்ட டங்களின் உரிமையாளர்களுக் கும் அனுப்பி இருக்கிறது. புதிய விதிமுறைகளின்படி பொது இடங்கள் அகன்று பெரியவையாக இருக்க வேண்டும். கலைகள், செயற்கை நீர்நிலை கள், கம்பி இணைப்பு இல்லாத இணைய வசதி, கைபேசிகளுக்கு மின்சக்தி ஏற்றிக்கொள்வதற்கான வசதிகள் முதலான கூடுதல் வசதிகளும் அத்தகைய இடங்களில் இருக்க வேண்டும் என்று புதிய விதிமுறைகள் கூறுகின்றன.

தஞ்சோங் பகார் சென்டர் கட்டடத்தில் உள்ள அர்பன் பார்க் என்ற இந்த இடம், தனியார் கட்டடம் ஒன்றில் நன்கு வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள பொது இடத்திற்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது. இந்தக் கட்டடத்தை கூகோலாண்ட் என்ற நிறுவனம் கட்டியது. படம்: கூகோலாண்ட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!