21,400 வேலைகள் உருவாகும்

தொழில்முனைப்புக்கு ஊக்க மூட்டும் ஸ்பிரிங் சிங்கப்பூர் நிறு வனத்திடம் இருந்து சுமார் 16,000 நிறுவனங்கள் சென்ற ஆண்டில் நிதி ஆதரவு பெற்று இருக்கின்றன. பொருளியல் வேகமில்லாமல் இருந்தபோதிலும் ஆயிரக்கணக் கான நிறுவனங்கள் ஸ்பிரிங் சிங் கப்பூரின் ஆதரவை நாடின. இந்த அமைப்பு சென்ற ஆண் டில் 16,300 சிறிய, நடுத்தர நிறு வனங்களுக்கு 16,700 செயல்திட் டங்களின் பேரில் மானியம் வழங்கி இருக்கிறது. கடந்த 2015ஆம் ஆண்டில் 20,000க்கும் அதிக நிறுவனங்கள் 22,000 செயல்திட்டங்களுக்காக ஸ்பிரிங் நிதி உதவியைப் பெற்றன. சென்ற ஆண்டில் நிதி ஆதரவு பெற்ற செயல்திட்டங்கள் முற்றிலும் செயலுக்கு வரும்போது அவை தேர்ச்சிமிக்க 21,400 வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதோடு அல்லாமல் பொருளிய லுக்கு $7.8 பில்லியன் மதிப்பை அவை கூட்டும் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்பிரிங் சிங்கப்பூர் 2015ல் கொடுத்த நிதி ஆதரவு திட்டங் களின் எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட அதிகம் என்றாலும் 2015 திட்டங்களின் மூலம் பொரு ளியலுக்கு ஏற்பட்ட மிகை மதிப்பு $6.9 பில்லியன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

'ஸ்பிரிங் சிங்கப்பூர்' அமைப்பு சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்ததன் பலனாக தேர்ச்சிமிக்க ஆயிரக்கணக்கான வேலைகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோப்புப்படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!