ஏடிஎம்களில் நகல் அட்டைகளைப் பயன்படுத்திய பல்கேரிய ஆடவர்

சிங்கப்பூருக்கு வந்து நகல் அட்டைகளைப் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களில் $2,000 பணத்தைச் சட்டவிரோத முறை யில் எடுக்க முயன்ற பல்கேரியா நாட்டைச் சேர்ந்த ஆடவர் ஒரு வருக்கு நேற்று ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மொத்தம் $900 ரொக்கத்தைத் திருட திட்டமிட்டதாகக் கூறும் எட்டு குற்றச்சாட்டுகளின் பேரில் இம்மாதம் 18ஆம் தேதி அந்த ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொண் டார். மொத்தம் $1,100 சம்பந்தப் பட்ட இதே போன்ற இதர ஒன்பது குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

பாவ்லோ நெட்யால்கோ மோம்சிலோவ், 48, என்ற அந்த ஆடவர் சென்ற ஆண்டு ஜூலை மாதம் பல்கேரியாவில் இருந்த போது, இன்னாரென்று தெரியாத ஒருவர் அவருக்கு ஒரு வேலை கொடுத்தார். நகல் அட்டைகளைப் பயன் படுத்தி சிங்கப்பூரில் ஏடிஎம் இயந் திரங்களில் பணத்தை எடுப்பது தான் அந்த வேலை. இப்படி செய் வதன் மூலம் அவருக்கு 20% தொகை கிடைக்கவிருந்தது. மோம்சிலோவ் சென்ற ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி சிங்கப் பூருக்கு வந்தார். செப்டம்பர் 4ஆம் தேதிக்கும் 8ஆம் தேதிக்கும் இடையில் பல்வேறு ஏடிஎம் இயந் திரங்களில் இருந்து அவர் பணத்தை எடுக்க முயன்றார்.

இதற்கிடையே, விமான நிலை யத்திலும் ஃபார் ஈஸ்ட் ஷாப்பிங் சென்டர் கடைத்தொகுதியிலும் பல நகல் அட்டைகள் கைப்பற் றப்பட்டு இருப்பதாக யுஓபி வங்கி யின் துணைத் தலைவர் டெஸ் மண்ட் கோ கியாவ் சியாங்கிற்கு செப்டம்பர் 7ஆம் தேதி செய்தி கிடைத்தது. அவர் போலிசில் புகார் செய்தார். அதற்கு இரண்டு நாள் கழித்து சிங்கப்பூரைவிட்டு வெளியேற முயன்றபோது அந்த பல்கேரிய ஆடவர் பிடிபட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!