‘கிராப்’, ‘உபர்’ கார்களில் சிறார்களுக்கு அனுமதி இல்லை; வாடகை கார்களுக்குத் தனிச் சட்டம்

'கிராப்', 'உபர்' கார்களில் சிறார் களுக்கு இடமில்லை என்பது சட்டமாகும். சாலைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தனியார் வாடகை கார்கள் 1.35 மீட்டருக்கும் குறை வான உயரமுள்ள சிறார்களை சிறார் இருக்கை இன்றி ஏற்றிச் செல்ல முடியாது. இத்தகைய தனியார் வாடகை கார்களில் கிராப், உபர் ஆகியவை உள்ளடங்கும். இவை டாக்சிகளைப் போல் அல்ல. இத்தகைய வாடகை கார்கள் பயணிகளுக்காக சாலை களில் ஓடுவதில்லை. உடன்பாட் டின் கீழ் இவை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளப்படுகின்றன என்பதால் இவற்றுக்குத் தனிப்பட்ட விதிமுறைகள் உள்ளன.

சட்டத்தை மீறி தவறு செய்யும் குற்றவாளிகளுக்குச் சமரச அபராதமாக $120 விதிக்க முடி யும். அவர்களுக்கு மூன்று குற்றப் புள்ளிகளும் கிடைக்கும். நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டு குற்றவாளிகள் என்று தீர்ப்பானால் $1,000 வரையிலான அபராதத்தை குற்றவாளிகள் செலுத்த வேண்டி வரும் அல்லது மூன்று மாதம் வரை அவர்கள் சிறையில் இருக்க நேரிடலாம்.

டாக்சிகளைப் போல் இல்லை. தனியார் கார்களுக்கு விதிகள் தனி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!