புதிய முறை: எஸ்எம்ஆர்டி டாக்சி மணிக்கணக்கில் வாடகைக்கு

எஸ்எம்ஆர்டி நிறுவனம் டாக்சி களைப் பகிர்ந்துகொள்வதற்கான புதிய ஏற்பாடு ஒன்றைப் பற்றி நேற்று அறிவித்தது. அதன்படி டாக்சி ஓட்டிகள் மணிக்கணக்கு அடிப்படையில் டாக்சியை வாட கைக்கு எடுத்து ஓட்டலாம். இப்போது அவர்கள் நாள் கணக்கு வாடகையில் டாக்சியை எடுத்து ஓட்டுகிறார்கள். இதுவே இந்த தொழில்துறையின் வழக்க மான நடைமுறையாக இருந்து வருகிறது. புதிய ஏற்பாட்டின்படி டாக்சி ஓட்டுநர்கள் மணிக்கணக்கு அடிப்படையில் டாக்சிகளை இயக்க முடியும். புதிய டாக்சி பகிர்வு நடைமுறை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் தொடங்கும் என்று எஸ்எம்ஆர்டி அறிவித்து இருக்கிறது. இந்த முறையின் மூலம் டாக்சி ஓட்டு நர்களுக்கு அதிக நீக்குப்போக்கு இருக்கும் என்பதால் இந்த நிறு வனத்தின் போட்டித்திறன் அதி கரிக்கும் என்று எஸ்எம்ஆர்டி தெரிவித்து இருக்கிறது. டாக்சி ஓட்டி வாழ்க்கைத் தொழில் உரிமத்தைப் பயன்படுத்தா மல் வைத்திருப்போரின் எண் ணிக்கை அதிகமாக இருக்கிறது.

இந்த வளத்தைப் பயன்படுத்திக் கொள்ள புதிய ஏற்பாடு வசதியாக இருக்கும் என்றும் பயணிகளின் தேவைக் கேற்ப டாக்சிகள் கிடைப் பதை இந்த ஏற்பாடு உறுதிப்படுத் தும் என்றும் எஸ்எம்ஆர்டி டாக்சி மற்றும் தனியார் வாடகைச் சேவைத் துறை நிர்வாக இயக்குநர் டோனி ஹெங் கூறினார். இப்போது சுமார் 100,000 டாக்சி ஓட்டி வாழ்க்கைத்தொழில் உரிமம் பெற்றவர்கள் இருக்கிறார் கள். ஆனால் இவர்களில் பாதிப் பேர் அந்த உரிமத்தைப் பயன்படுத் துவதில்லை. புதிய டாக்சி பகிர்வு ஏற்பாட்டின் கீழ் கட்டணம் ஒரு மணிக்கு $5.80 முதல் $12.80 வரை இருக் கும். டாக்சி ஓட்டிகள் இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் மூன்று மணி நேரத்திற்கு வாக னத்தை வாடகைக்கு எடுக்கலாம். எஸ்எம்ஆர்டி நிறுவனத்திடம் மொத்தம் 3,500 டாக்சிகள் இருக் கின்றன. அவற்றில் 5% டாக்சிகளை அதாவது 175 டாக்சிகளை அந்த நிறுவனம் வாடகைக்குக் கொடுக் கிறது. இவற்றை டாக்சி பகிர்வு ஏற்பாட்டுக்குப் பயன்படுத்த நிறு வனம் திட்டமிடுகிறது. தேவைக்கேற்ப இத்தகைய டாக்சிகளின் எண்ணிக்கையை அது கூட்டும்.

எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் புதிய 'டாக்சி பகிர்வு ஏற்பாடு' காரணமாக நிறுவனத்தின் போட்டித்திறன் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!