தமிழ் மொழிபெயர்ப்பு சரிபார்ப்பு கடுமையாகும்

சுதாஸகி ராமன்

பொதுமக்களுக்குச் சென்று அடையும் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்களை மேலும் கடுமை யாகச் சரிபார்க்கக்கூடிய செயல் முறையை அரசு அமைப்புகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சுகாதார, தொடர்பு, தகவல் துணை அமைச்சர் திரு சீ ஹொங் டாட் கூறியுள்ளார். தமிழ் மொழிபெயர்ப்பும் சரி பார்த்தலும் நல்ல தரத்துடன் இருப்பதை உறுதி செய்ய அந்த அமைப்புகள் அரசாங்கத்தின் மொழிபெயர்ப்பு, சரிபார்க்கும் சேவை கட்டமைப்பைப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். அரசு மொழிபெயர்ப்பின் மறு ஆய்வுக் குழுவிற்கு நன்றி கூறும் வகையில் இந்திய மரபுடைமை நிலையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விவரங்களை அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய மொழிபெயர்ப்புக் குழு வும் தமிழ் மொழிவளக் குழுவும் இணைந்து அரசு மொழி பெயர்ப்பின் தரத்தை உயர்த்த கடந்த ஆண்டு இந்த மறு ஆய்வை மேற்கொண்டன. இந்த மறுஆய்வுக் குழு மூன்று பரந்த கண்ணோட்டத்திலான பரிந் துரைகளை முன்வைத்துள்ளது என்று அமைச்சர் விவரித்தார். தமிழ் மொழிபெயர்ப்பைச் சரி பார்க்கும் நடைமுறைகளைக் கடுமையாக்குதல், பொருள் விளங்காத தமிழ் மொழிபெயர்ப்பு தொடர்பான தொழில்நுட்பச் சிக்கல்களை ஆராய்தல், அடுத்த தலைமுறை மொழிபெயர்ப்பாளர் களின் திறன்களை மேம்படுத் துதல் ஆகியவை இந்த மூன்று பரந்த பரிந்துரைகள்.

"தமிழ் மொழி நிபுணர்கள், சமூகப் பங்குதாரர்களுடன் நிகழ்த்திய கலந்துரையாடலின்படி தமிழ் மொழிபெயர்ப்பில் ஏற்படும் தவறுகளுக்கு மொழிபெயர்ப் புகள் சரிபார்க்கப்படாததும் ஒரு சில பதிப்பகங்கள் பயன் படுத்தும் ஏற்றுக்கொள்ள முடி யாத எழுத்துருக்களும் காரணங் களாக அமைகின்றன," என்று அமைச்சர் கூறினார்.

அரசு மொழி பெயர்ப்பின் மறுஆய்வுக் குழு விற்கு நன்றி கூறும் வகையில் இந்திய மரபுடைமை நிலையத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் (இடமிருந்து) ஜே ஜீ மெல்வானி குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு ஆர். தினகரன், தமிழ் மொழிவளக் குழுவின் தலைவர் திரு ஆ. பழனியப்பன், துணை அமைச்சர் திரு சீ ஹொங் டாட், தமிழ் மொழி பாடத்திட்ட, மேம் பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் திரு டி. வேணுகோபால். படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!