மாயாஜால நிபுணர் சந்திரன் மீது 58 குற்றச்சாட்டுகள்

சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் பிரபலமான மாயாஜால நிபுணர் எஸ் சந்திரன், 35, மீது 58 குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டு இருக் கின்றன. உற்பத்தித்திறன், புத்தாக்க ரொக்கப் பற்றுத் திட்டத்தின்கீழ் பணமாகவும் போனசாகவும் $1.1 மில்லியன் தொகையை 49 பேர் சட்டத்திற்குப் புறம்பான முறையில் பெறுவதற்கு சந்திரன் உதவி இருக்கிறார் என்று குற்றச்சாட்டு கள் கூறுகின்றன. இந்த ரொக்கப் பற்றுத் திட்டம் தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள ஆக அதிகத் தொகை சம்பந்தப் பட்ட வழக்கு இதுவே என்று கூறப்படுகிறது.

மாயாஜால நிபுணர் சந்திரன் 'பேரடைஸ் கன்சல்டன்சி' என்ற ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருக்கு $200,000 பிணை அனுமதிக்கப்பட்டு இருக் கிறது. சந்திரன் பிப்ரவரி 3ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார். உற்பத்தித்திறன், புத்தாக்க ரொக்கப் பற்றுத் திட்டத்தின்கீழ் பலரும் தவறான முறையில் பணத்தைப் பெற்று இருப்பதாகச் சந்தேகம் கிளம்பியதை அடுத்து இந்த விவகாரம் பற்றி சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் கடந்த ஆண்டில் பெரிய அளவில் புலன்விசாரணை நடத்தியது.

சந்தேகத்திற்கு இடமான பல கோரிக்கைகளிலும் சந்திரன் சம்பந்தப்பட்டிருந்தது புலன்விசார னை மூலம் தெரியவந்தது. இந்த ஆணையத்தின் புலன் விசாரணையில் உதவுவதற்காக சுமார் 200 பேர் அழைக்கப்பட்டனர். புலன்விசாரணை முடி வடைந்ததும் உற்பத்தித்திறன், புத்தாக்க ரொக்கப் பற்றுத் திட் டத்தின் கீழ் தொகையைக் கோரி யிருப்போருக்கு எதிராக தேவைப் பட்டால் அமலாக்க நடவடிக்கை கள் எடுக்கப்படும் என்று ஆணை யம் தெரிவித்துள்ளது.

மாயாஜால நிபுணர் எஸ் சந்திரன். இவர் 58 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். படம்: தி நியூ பேப்பர்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!