சீனப் புத்தாண்டிலும் சிங்கப்பூருக்காக உழைப்போரைப் பாராட்டிய அமைச்சர்கள்

சேவல் ஆண்டைக் கொண்டாட பல குடும்பங்களும் ஒன்றுகூடிக் கொண்டிருந்த வேளையில் பொது வசதிகள் தங்குதடையின்றி நீடிக்க சிலர் புத்தாண்டு விடுமுறையி லும் உழைத்து வருவதை அமைச்சர்கள் பாராட்டினர். பிரதமர் லீ, சீனப் புத்தாண்டின் முதல் நாளில் தாம் செனோகோ மின் நிலையத்திற்குச் சென்று அங்கு பணியிலிருந்த ஊழியர்களுடன் நடத்திய சந்திப்பு குறித்து தமது ஃபேஸ்புக்கில் படங்களுடன் பகிர்ந்துள்ளார். "மின்சாரம், தண் ணீர் போன்ற வசதிகளை நாம் சுலபமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அதேவேளை இது போன்ற வசதி வழங்கலில் தவ றேதும் நிகழாமல் கண்ணும் கருத் துடனும் பணியாற்றுவோரும் இருக்கின்றனர்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

துணைப் பிரதமர் டியோ சீ ஹியன், பாசிர் ரிஸ் அக்கம்பக்க போலிஸ் நிலையத்துக்குச் சென்று அங்கு பணியிலிருந்த போலிஸ் அதிகாரிகளைச் சந்தித்துப் பாராட் டினார். அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தமது ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட திரு டியோ, "புத்தாண்டு விடு முறை நாட்களைக் கொண்டாடும் நமது பாதுகாப்பில் கவனம் செலுத்திக் கடுமையாகப் பாடுபடு கிறார்கள் இந்த அதிகாரிகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!