தாய், மகள் மரணத்தில் ஆடவர் கைது

உட்லண்ட்ஸில் தாயும் மகளும் மரணமடைந்த சம்பவத்தில் 41 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். மரணச் சம்பவம் சந்திரமுறை புத்தாண்டின் முதல் நாளான நேற்று முன்தினம் புளோக் 619 உட்லண்ட்ஸ் டிரைவ் 52ல் நிகழ்ந்தது. மாண்ட பெண்ணின் வயது 39 என்றும் குழந்தையின் வயது நான்கு என்றும் போலிஸ் தெரி வித்தது. புளோக்கின் 6வது தளத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து மாலை 6.35 மணியள வில் தகவல் பெற்ற போலிசார், சம்பவ இடத்திற்குச் சென்றபோது சடலங்களைக் கண்டனர்.

திருவாட்டி சூங் பெய் ஷான் என்று நம்பப்படும் பெண் இரவு 7 மணியளவில் மாண்டதாக அறிவிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்ணின் கணவர் என்று நம்பப்படும் டியோ கிம் ஹெங் என்பவர் அந்த வீட்டில் கைது செய்யப்பட்டார். சம்பவ இடத்திற்கு 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தியாளர் சென்ற போது கருகிய வாடை உணரப் பட்டதாகவும் குப்பைத் தொட்டியில் போலிசார் ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக் கப்பட்டது.

மாண்ட மாதின் கணவர் என்று நம்பப்படும் 41 வயது ஆடவரைக் கைது செய்து அழைத்துச் சென்ற போலிசார், இயற்கைக்கு மாறான மரணங்கள் என்று அறிவித்து விசாரணை நடத்தி வருகின்றனர். படம்: ‌ஷின் மின்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!