பொதுவிடுமுறையைக் கழிக்க இஸ்தானாவில் கூடிய மக்கள்

சிங்கப்பூர் அதிபர் மாளிகையின் தனிச்சிறப்பு, நம் வரலாற்றில் அது பிடித்துள்ள இடம் ஆகியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள 20 வயது அஷ்வின் சண்முகம் முதல் முறை யாக நேற்று அங்கு சென்றிருந்தார். தேசிய சேவையை முடித்து விட்டு பல்கலைக்கழகத்தில் சேர் வதற்காகக் காத்துக்கொண்டிருக் கும் அவர், சீனப் புத்தாண்டு விடுமுறையை அர்த்தமுள்ள விதத்தில் தமது குடும்பத்தினருடன் அதிபர் மாளிகையில் கழித்தார்.

"ஓராண்டில் ஒரு சில நாட்கள் மட்டுமே அதிபர் மாளிகை பொது மக்களுக்குத் திறந்து வைக்கப் பட்டிருக்கும். முதல் முறையாக வருவதால் மாளிகை எப்படி இருக் கும், உள்ளே என்ன இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆர்வத் துடன் இருந்தேன்,"என்றார்அவர். சீனப் புத்தாண்டை ஒட்டி நேற்று அதிபர் மாளிகை பொது மக்களுக்குத் திறக்கப்பட்டது. காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை அதிபர் மாளிகை, அதைச் சுற்றியுள்ள பூங்காக்களில் நண்பர்கள், உறவினர்கள் ஆகி யோருடன் பலர் பொழுதைக் கழித்தனர். பொதுவிடுமுறை என்பதால் அதிபர் மாளிகையைக்காண பல்லாயிரக்கணக்கான பேர் திரளாக வந்திருந்தனர்.

யுவான் சிங் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை 2ல் பயிலும் மாணவர்களான மிஷான் விரேந்திரன், கவிஷான் சுப்பையா, மேக்சிமஸ் ஆகியோர் சிங்க நடனத்தில் பங்கேற்றனர். இவர்களில் மேக்சிமஸ் சிங்க வேடமிட்டிருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!