சிங்கப்பூரின் பலம் நமது கலாசாரம்

சிங்கப்பூரின் ஒவ்வொரு தனிப்பட்ட கலாசாரமும் அந்த நாட் டிற்குப் பலமாக இருப்பதாக உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்து இருக்கிறார். சிங்கப்பூரின் சீன, மலாய், இந்திய கலாசாரங்கள் ஒவ்வொன் றும் நாட்டிற்குப் பலம் என்றார் அவர். ஷென்டன் வேயில் புதிதாகக் கட்டப்பட்டு இருக்கும் சிங்கப்பூர் சீன கலாசார நிலையத்தில் நேற்றுக் காலை வருடாந்திர சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சட்ட அமைச்சருமான சண்முகம், சிங்கப்பூரின் கலாசாரம் அந்த நாட்டிற்கே உரிய சீரிய தன்மை உடைய ஒன்று என்றார். "நாம் சீனாவைச் சேர்ந்த சீனர்களோ இந்தியாவைச் சேர்ந்த இந்தியர்களோ மலேசி யாவைச் சேர்ந்த மலாய்க்காரர் களோ அல்ல. "நாம் சிங்கப்பூரர்களான சீனர்கள். நாம் சிங்கப்பூரர்களான இந்தியர்கள். நாம் சிங்கப்பூரர்களான மலாய்க்காரர்கள். இது அந்த நாடுகளிலிருந்து வேறுபட்ட ஒன்று," என்றார் அமைச்சர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!