‘லோகெ’ விருந்தும் பத்துமலை பயணமும்

வில்சன் சைலஸ்

ஆண்டின் தொடக்கத்திலேயே கிடைத்த நீண்ட விடுமுறையைக் குடும்பம், நண்பர்களுடன் மகிழ்ச் சியாக வெளிநாடு செல்வது, பொழுதுபோக்கில் ஈடுபடுதல் போன்ற நடவடிக்கைகளைப் பலரும் மேற்கொள்ள, குடும்பத் துடன் இணைந்து சீனப் பாரம் பரியத்துடன் சீனப் புத்தாண்டைக் கொண்டாடி மகிழ்ந்தனர் 24 வயது குமாரி மாலினியின் உறவினர்கள். தேசிய தினம், தீபாவளி போன்ற விழாக்காலங்களில் ஒன்றுகூடும் இவர்கள், சீனப் புத்தாண்டை முன்னிட்டு நான் காவது ஆண்டாகக் குடும்ப ஒன்றுகூடலுக்குக் கடந்த ஞாயிற் றுக்கிழமை ஏற்பாடு செய்தனர். உறவினர்களில் சிலர் ஒரே வட்டாரத்தில் வசித்து வந்தாலும் ஒரே கூரையின்கீழ் அனைவரையும் பார்ப்பது அரிது என்ற குமாரி டெவினா மிஷெல் மாலினி, இவை போன்ற ஒன்றுகூடல்கள் குடும்ப உறவுகளை வலுப்படுத்தவும் ஒற்றுமையை வளர்க்கவும் உதவு கின்றன என்றார்.

பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் பிற இனத்தவரின் கலாசாரங்களையும் புரிந்துகொள் வது அவசியம் என்ற அவர், "சீனப் புத்தாண்டு என்பதால் அனைவரும் சிவப்பு உடை உடுத்த முடிவுசெய்தோம்," என்று சிரித்த வாறு கூறினார். மாலினியின் சித்தப்பா திரு சரவணனின் பெரிய வீவக வீட்டில் மாலை 6 மணியளவில் கூடிய குடும்பத்தினர் ஆடல், பாடல், விளையாட்டுப் போட்டிகளில் பொழுதைக் கழித்தனர். இரவு சுமார் 11 மணி வரை கொண்டாட் டம் நீடித்தது. "பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் குடும்பத்துடன் நேரம் செலவிட இவை போன்ற தருணங் கள் உதவுகின்றன.

மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோயிலில் விடுமுறையைக் கொண்டாடிய மகிழ்ச்சியில் ஊழியர்கள்.

படம்: வெஸ்ட்லைட் தங்கும் விடுதி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!