கவச வாகனங்கள் சிங்கப்பூர் திரும்பின

சிங்கப்பூர் ஆயுதப்படைகளுக்குச் சொந்தமான ஒன்பது கவச வாக னங்களும் சிங்கப்பூர் திரும்பி இருக்கின்றன. அந்த வாகனங்கள் சென்ற ஆண்டு நவம்பர் 23 முதல் ஹாங் காங்கில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தன. டெர்ரக்ஸ் வகையைச் சேர்ந்த ஒன்பது காலாட்படை கவச வாகனங்களும் இதர சாதனங்களும் திங்கட்கிழமை பிற்பகல் 2.40 மணிக்கு சிங்கப்பூர் வந்து சேர்ந்ததாகவும் பயிற்சிக்குப் பிந்திய பரிசோதனைகளுக்காக அவை சிங்கப்பூர் ஆயுதப்படை முகாம் ஒன்றிற்கு கொண்டு செல்லப்படும் என்றும் அறிக்கை ஒன்றில் தற் காப்பு அமைச்சு நேற்றுத் தெரி வித்தது.

பயிற்சிக்குப் பிந்திய பரி சோதனைகளையொட்டி எல்லா வாகனங்களும் சாதனங்களும் முற்றிலும் சோதிக்கப்படும். வழக்க மான பராமரிப்புப் பணிகளும் அவற்றில் மேற்கொள்ளப்படும் என்று அறிக்கை தெரிவித்தது. சிங்கப்பூர் ஆயுதப்படைக்குச் சொந்தமான அந்த ஒன்பது கவச வாகனங்களும் இதர சாதனங் களும் ஏபிஎல் கப்பல் போக்கு வரத்து நிறுவனத்தின் கொள்கலக் கப்பலில் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி சிங்கப்பூருக்கு தி ரு ம் பி க் கொ ண் டி ரு ந் த போ து ஹாங்காங் சுங்கத்துறை அவற் றைத் தடுத்துவைத்துவிட்டது.

தைவானில் நடந்த சிங்கப்பூர் ஆயுதப்படைப் பயிற்சியை முடித் துக்கொண்டு அந்தக் கவச வாகனங்கள் சிங்கப்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்தன. வழியில் ஹாங்காங் அதிகாரிகள் அவற்றைத் தடுத்துவைத்துவிட்டனர். அந்த வாகனங்களுக்கு உரிய முறையான அனுமதிகளைத் தாக்கல் செய்ய ஏபிஎல் கப்பல் நிறுவனம் தவறிவிட்டதாக முன்ன தாக வெளியான ஊடகத் தகவல் கள் தெரிவித்தன. டெர்ரக்ஸ் கவச வாகனங்கள் சிங்கப்பூரில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டவை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!