கடுமையாகும் வளர்ப்புப் பிராணி உரிம விதிமுறைகள்

நாய் உரிமையாளர்களுக் கான புதிய உரிம விதிமுறை கள் மார்ச் முதல் தேதியில் இருந்து நடப்புக்கு வரும் என்று வேளாண் உணவு கால்நடை மருத்துவ ஆணையம் நேற்று தெரிவித்தது. கடந்த ஆண்டு நவம்பரில் அறிவிக்கப்பட்ட இந்த மேம்படுத் தப்பட்ட கட்டுப்பாடுகளின் கீழ், நாய் உரிமையாளர்கள் பிராணி களை விற்கும்போதோ, வேறொருவரிடம் கொடுக்கும் போதோ ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும். நாயின் புதிய உரிமையாளர் விவரத்தையும் அவர்கள் கொடுக்க வேண்டும். வளர்ப்புப் பிராணிகளை விற்கும் கடைக்காரர்களும் வாடிக்கையாளரிடம் பிராணியை ஒப்படைக்கும் முன்பாக அதற்கான உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

தற்போது நாய்களுக்கு உரிமம் வாங்கும் பொறுப்பு உரிமை யாளர்களிடம் உள்ளது. குறிப்பாக, காணாமல் போகும் நாய்களை அடையாளம் காணவும் பிராணிகளைக் கை விடுவதைத் தவிர்க்கவும் நாய்களுக்கு நோய் பரவும் போது அதுகுறித்து தெரி விக்கவும் இந்த கட்டுப் பாடுகள் வகை செய்வதாக ஆணையம் தெரிவித்தது.

அறிவிப்பைத் தொடர்ந்து, வளர்ப்பு பிராணிகளை விற்கும் கடைக்கார்களைப் புதிய சட்டத்துக்கு தங்களைத் தயார்படுத்த அவர்களுடன் தாம் பணியாற்றி வருவதாகவும் ஊக்கமளிக்கும் கருத்துகள் கிடைத்துள்ளதாகவும் ஆணையம் கூறியது. மாற்றம் செய்யப்பட்ட இந்த உரிமக் கட்டுப்பாடு களைப் பின்பற்ற கடைக் காரர்களுக்கு உதவ, நாய்களுக்கான 'குழும' உரிமங்களை வாங்கலாம். விற்கப்படும் நாய்களின் எண்ணிக்கையைப் பொறுத்து உரிமக் கட்டணங்கள் அமையும் என்று ஆணையம் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!