ஜெர்மன் விமான நிலையத்தில் அவமானப்பட்டதாக மாது புகார்

தாய்ப் பால் சுரப்பதை உறுதிப்படுத்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் முன்னிலையில் மார்பை அழுத்தி காட்டக் கூறியதற்காக ஜெர்மன் போலி சாரிடம் 33 வயது சிங்கப்பூரரான காயத்திரி போஸ் என்பவர் புகார் செய்துள்ளார். அந்த அனுபவத்தால் அவ மானப்படுத்தப்பட்டதாகக் கருதும் காயத்திரி சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பிபிசி செய்தியிடம் கூறினார். மார்பிலிருந்து பாலை எடுக்கப் பயன்படுத்தப்படும் கருவியை வைத்திருந்த அவர் தமது குழந்தையுடன் பயணம் செய்யாத தால் பிராங்ஃபோர்ட் விமான நிலைய அதிகாரிகள் தம்மீது சந்தேகப்பட்டதாக அவர் கூறினார். இது குறித்து கருத்துக்கூற மறுத்துவிட்ட ஜெர்மன் போலிஸ் அதிகாரிகள், எனினும் அந்த சோதனை நிச்சயமாக வழக்க மான நடவடிக்கை ஒன்றல்ல என்று தெரிவித்தனர்.

பாரிஸ் செல்ல இருந்த அவரது பையில் பால் எடுக்கும் கருவி காணப்பட்டதால் ஃபிராங்ஃபோர்ட் விமான நிலைய அதிகாரிகள் அவரைச் சோதனைக்கு உட்படுத் தினர். அது தாய்ப் பால் எடுக்கும் கருவி என்பதை அவர்கள் முதலில் நம்ப மறுத்தனர். அவரின் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு, அவரை தனி அறையில் பெண் அதிகாரி சோதனையிட்டார். சோதனைக்குப் பின்னர் அறையிலிருந்து வெளியில் வந்த அவர் தாம் அவமானப்படுத்தப் பட்டதால் அழுததாகக் கூறும் காயத்திரி போஸ், "கடைசியாக என்னை விமானப் பயணத்துக்கு அனுமதித்தபோது, ஒருவரை இப்படி நடத்துவது முறையல்ல என்று கூறினேன். அதற்கு அந்த அதிகாரி, எவ்வித சலனமுமின்றி, சோதனை முடிந்து விட்டது நீங்கள் செல்லலாம்," என்றார்.

காயத்திரி போஸ். படம்: பிபிசி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!