குற்றச்செயல்களில் வாடகை கார்கள்

குற்றச் செயல்களில் ஈடுபட தங்களது கார்களில் சில வாடகைக்கு எடுக்கப்படுவதாக கார் வாடகை நிறுவன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அந்த கார்கள் விசாரணைக்காக பறிமுதல் செய்யப்படுவதுடன் ஓட்டுநர்கள் கைதுசெய்யப்படும்போது அவை சேதமும் அடைகின்றன. கடந்த 2014க்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு 70க்கு மேற்பட்ட வாடகை கார்களை விசாரணைக்காகத் தடுத்து வைத்தது. வாடகை கார் தொடர்பான ஆக அண்மைய சம்பவம் ஜனவரி 13ஆம் தேதி நிகழ்ந்தது. அதில் ஹோண்டா ஃபிட் காரை போலிஸ் 5 கிலோமீட்டர் தூரம் துரத்தி போதைப் பொருள் குற்றம் தொடர்பாக ஓட்டுநரையும் பயணியையும் கைது செய்தது. குற்றச்செயல்களுக்கு வாடகை கார்களை பயன்படுத்தினால் பிடிபடுவது சிரமம் எனக் கருதுவதால் குற்றவாளிகள் அவ்வழியை நாடுவதாக தெரிவிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!