‘டிபிபி’யிலிருந்து அமெரிக்கா விலகுவது உலக வர்த்தகத்திற்கு பின்னடைவுதான், முடிவல்ல

பசிபிக் நாடுகள் பங்காளித்துவ வர்த்தக உடன்பாட்டிலிருந்து வெளியேறிவிட அமெரிக்கா எடுத் திருக்கும் முடிவு ஒரு பின்ன டைவுதான் என்று சிங்கப்பூர் தெரி வித்துள்ளது. இருந்தாலும் அமெரிக்காவின் அந்த முடிவு, உலக வர்த்தகத்தை தாராளமயமாக்கும் திட்டத்திற்கு முடிவு கட்டிவிடாது என்று வர்த்தக தொழில் அமைச்சர் (வர்த்தகம்) லிம் ஹங் கியாங் நேற்று நாடாளு மன்றத்தில் தெரிவித்தார். ஆங் வெய் நெங், பிரித்தம் சிங் ஆகிய நாடாளுமன்ற உறுப்பி னர்கள், நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ராண்டோல்ஃப் டான் ஆகியோருக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர், அமெரிக்கா விலகிக்கொள்வதன் காரணமாக அந்த உடன்பாட்டை, அது கையெ ழுத்திடப்பட்டபோது இருந்த நிலை யிலேயே அமல்படுத்த முடியாது என்று கூறினார்.

பசிபிக் நாடுகள் பங்காளித்துவ உடன்பாட்டில் கையெழுத்திட்டு இருக்கும் எஞ்சிய 11 உறுப்பி னர்களும் அமெரிக்கா விலகுவதை அடுத்து ஏற்படக்கூடிய பலாபலன் களை எப்படி சமநிலைப்படுத்தலாம் என்பது பற்றி மிகக் கவனமாக ஆராய வேண்டி இருக்கும் என்று திரு லிம் குறிப்பிட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!