ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காத 158 முதலாளிகள்

ஊழியர்களுக்குச் சம்பளம் வழங் காததால் கடந்த மூன்று ஆண்டு களில் 158 முதலாளிகள் மீது நீதிமன்றங்களில் குற்றம் நிரூபண மானதாக மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே நேற்று தெரிவித்தார். இதுபோல் இனி நிகழாமல் இருக்க கடுமையான வழக்குகள் மீதும் மீண்டும் மீண்டும் தவறு செய்யும் முதலாளிகளுக்கு எதி ராகவும் மனிதவள அமைச்சு வழக்கு தொடுக்கும் என்ற அவர், முதலாளிகள் ஊழியர்களுக்குச் சம்பள பாக்கியை வைக்கும் அனைத்து புகார்களையும் குற்றச் செயல்களாகக் கருதுவதில்லை என்றார். கடந்த ஆண்டு ஊழியர்க ளுக்குச் சம்பளம் வழங்காத 4,500 முதலாளிகளுக்கு எதிராக 9,000 புகார்களை அமைச்சு பெற்றது.

இவற்றுள் 95% வழக்குகள் அமைச்சாலும் தொழிலாளர் நீதி மன்றத்தாலும் தீர்த்து வைக்கப் பட்டன என்றார் திரு லிம். கடந்த ஆண்டு தீர்த்து வைக் கப்படாத 208 வழக்குகளில், செயல்பாடுகளை நிறுத்திக் கொண்ட அல்லது நிதி நெருக் கடியினால் தொழில்களை இழுத்து மூடவிருந்த 199 முதலாளிகள் அடங்குவர். வேலையிடத்தில் ஏற்பட்ட காயம் தொடர்பான இழப்பீட்டைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டு காயம் அடைந்த 16,000 ஊழியர் களில் ஐந்து பேருக்கு முதலாளிகள் காப்புறுதி வழங்காததால் அவர் களுக்கு இழப்பீடு வழங்கப்பட வில்லை. அந்த ஐவரில் நால்வர் வெளிநாட்டினர் என்றும் சம்பந்தப் பட்ட முதலாளிகளுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் லிம் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!