‘நகர மன்றங்களுக்கு உயர் தரங்கள் தேவை’

நகர மன்றங்களின் ஆளுமைமீது கூடுதல் கண்காணிப்பு அதிகாரம் பெறுவதற்காக அரசாங்கம் பரிந்து ரைக்கும் சட்டத் திருத்தங்களின் கீழ், வெளிப்படைத்தன்மை, ஆளுமை ஆகியவற்றில் நகர மன்றங்கள் உயர் தரங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். நகர மன்றச் சட்டத்தில் பரிந் துரைக்கப்படும் மாற்றங்களின்கீழ், நிதி ஆண்டு முடிவடைந்து ஆறு மாதங்களுக்குள் தணிக்கை செய் யப்பட்ட நிதி அறிக்கைகளை நகர மன்றங்கள் சமர்ப்பிக்கவேண்டும். அதோடு, நகர மன்ற ஊழியர்கள் வெளிப்படுத்தும் தன்னார்வ முரண்பாடுகளின் பதிவேடு போன் றவற்றையும் வைத்திருக்க வேண் டும்.

அவ்வாறு செய்யத் தவறும் நகர மன்றங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். எடுத்துக்காட்டாக, தன்னார்வ முரண்பாடுகளின் பதிவேட்டை நிலைநாட்டத் தவறும் நகர மன்றத் தின் செயலாளருக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகளைக் குறித்த காலத் திற்குள் சமர்ப்பிக்காத நகர மன் றங்களுக்கும் $5,000 வரை அப ராதம் விதிக்கப்படலாம். தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ இந்த மாற்றங்களை நேற்று நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!