‘சிங்கப்பூருடன் நல்லுறவுடன் உரிமைகளைக் காப்போம் - மலேசியா’

கோலாலம்பூர்: சிங்கப்பூருடன் நல்லுறவைக் கட்டிக்காப்பதுடன் 'புலாவ் பத்து பூத்தே' தீவு மலேசியாவுக்குச் சொந்தமானது என்பதை புதிய கண்டுபிடிப்புகள் நிரூபித்தால் கடலோர எல்லைகளையும் தற்காப்போம் என்று மலேசிய துணை வெளியுறவு அமைச்சர் நேற்றுத் தெரிவித்தார். சிங்கப்பூர் நீரிணையின் கிழக்கு நுழைவாயிலில் சிங்கப்பூருக்குக் கிழக்கே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் இடம்பெற்றுள்ள அந்தத் தீவை பெட்ரா பிராங்கா என்று சிங்கப்பூர் அழைக்கிறது. 1850களிலிருந்து பிரிட்டனும் அதன் பிறகு சிங்கப்பூரும் தீவை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துவந்துள்ளன.

இந்த நிலையில் 'த ஸ்டார் ஆன்லைன்' வெளியிட்ட செய்தியில் சிங்கப்பூருடன் மலேசியா தொடர்ந்து நல்லுறவைப் பேணி வளர்ப்பதுடன் தீவை அடையும் சாத்தியங்களும் ஆராயப்படும் என்று அமைச்சர் ரீசல் மெரிக்கான் நயினா மெரிக்கான் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. "2008ல் அனைத்துலக நீதிமன்றம் அந்தத்தீவு சிங்கப்பூருக்குச் சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கியபோது இரு நாடுகளுக்கு இடையிலான உறவு பாதிக்கப்படவில்லை," என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், "சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே வர்த்தகம் மேலும் அதிகரித்தது," என்றார். இதற்கிடையே மலேசியாவின் ஓய்வு பெற்ற ராணுவ அட்மிரல் ஒருவர், நீதிமன்றத் தீர்ப்பை மறுஆய்வுக்குக் கோரும் மலேசியாவின் விண்ணப்பம் வலுவாக இருப்பதாக நம்பிக்கைத் தெரிவித்தார். 2008ல் ஹேக் அனைத்துலக நீதிமன்றத்தில் மலேசியா தரப்பில் வாதிட்ட குழுவில் இடம்பெற்ற முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான ரியர் அட்மிரல் கே. தனபாலசிங்கம், புதிய ஆதாரங்கள் மலேசியாவுக்கு ஆதரவாக இருக்கும் என்று கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!