செப்டம்பரில் அதிபர் தேர்தல்

வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படும் சிங்கப்பூர் அதிபர் தேர்தல் இந்த முறை செப்டம்பர் மாதம் நடத்தப்பட இருப்பதாக பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் நேற்று நாடாளு மன்றத்தில் அறிவித்தார். ஆகஸ்ட் மாதத்தில் தேசிய தினக் கொண்டாட்டங்களின் போது அதிபர் தேர்தலுக்கான பிர சாரம் நடைபெறுவதைத் தவிர்க் கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி அதிபர் டோனி டான் கெங் யாமின் பதவிக்காலம் முடிவுறு கிறது.

அடுத்த அதிபர் தேர்தலுக்குப் போட்டி இருப்பின் செப்டம்பர் மாதத்தில் வாக்களிப்பு நடை பெறும் என்று நாடாளுமன்றத் தில் அதிபர் தேர்தல் திருத்த மசோதா மீதான இரண்டாம் வாசிப்பின்போது திரு சான் குறிப்பிட்டார். தேர்தல் தேதியை திருத்து வதற்கு சட்டத்தை மாற்றவேண் டிய அவசியம் இல்லை. மேலும், வெளிப்படைத்தன்மையை கடைப் பிடிக்கும் நோக்கிலும் மாற்றங் களை வேட்பாளர்கள் அறிந்து கொள்ளும் விதமாகவும் அரசாங் கம் இந்த அறிவிப்பை முன் கூட்டியே வெளியிடுவதாக அவர் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!