மின்தடையால் லிட்டில் இந்தியாவில் செயலிழந்த 6 மின்தூக்கிகள்

லிட்டில் இந்தியாவில் உள்ள தேக்கா உணவு நிலையத்துக்கு அருகில் இருக்கும் இரண்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கட்டடங்களின் ஆறு மின்தூக்கிகள், நேற்று முன்தினம் இரவு, ஆறு மணி நேரத்துக்குச் செயலிழந்தன. அந்தக் கட்டடங்களில் ஏற்பட்ட மின்தடை காரணமாக மின்தூக்கிகள் செயலிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மின்தடையால் அந்தக் கட்டடங்களில் பல வீடுகளுக்கு மின்சாரச் சேவை இல்லாமல் போனது. பஃப்ளோ சாலையில் உள்ள புளோக் 662, 663 ஆகிய கட்டடங்களில் இரவு சுமார் 7 மணிக்கு மின்தடை ஏற்பட்டதாகவும் நள்ளிரவு வரை மின்தூக்கிச் செயலிழப்பால் குடியிருப்பாளர்கள் பாதிப்படைந்ததாகவும் ‌ஷின் மின் நாளிதழ் தெரிவித்தது.

மின்தடையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 73 வீடுகளுக்கு இரவு 9 மணிக்குள் மின்சார சேவை திரும்பவும் வழங்கப்பட்டதாக தஞ்சோங் பகார் நகர மன்றம் கூறியது. நள்ளிரவு 12 மணியிலிருந்து பின்னிரவு 12.30 மணிக்குள் மின்தூக்கிகள் வழக்கநிலைக்குத் திரும்பியதாக நகர மன்றம் தெரிவித்தது. மின்தடை ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய 'எஸ்பி பவர்கிரிட்'டுடன் இணைந்து செயல்படுவதாக நகர மன்றம் கூறியது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!