நள்ளிரவில் பெயர்ந்து விழுந்த வீவக வீட்டு கான்கிரீட் கூரை

நள்ளிரவில் கழிவறைக்குச் செல்வதற்காக படுக்கையிலிருந்து எழுந்து வந்த 70 வயது சென் சியூ யிங் கண் முன்னே அவரது அடுக்களை கான்கிரீட் கூரை இடிந்துவிழுந்தது. ஒரு கேரம் போர்ட் அளவுக்கு கான்கிரீட் பாளம் பெயர்ந்தது. மரின் டெரசில் உள்ள புளோக் 51ல் நேற்று முன்தினம் இரவு இது நிகழ்ந்ததாக ‌ஷின் மின் நாளிதழ் தெரிவித்தது. தனக்கு முன்னால் 2 மீட்டர் தூரத்தில் பெரிய கான்கிரீட் பாளம் விழுந்தது என திருமதி சென் கூறினார். "சற்று முன்னதாகச் சென்றிருந்தாலும் என் தலை மீது பாளம் விழுந்திருக்கும். அதிர்ஷ்டவசமாகத் தப்பினேன்," என்றார் திருமதி சென். 43 வயதான அந்தக் கட்டடத்தில் கான்கிரீட் பாளம் இயற்கைச் சிதைவு காரணமாக விழுந்திருக்கலாம் என்று குறிப்பிட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேச்சாளர், வாடகை வீடான இதனைச் சரி செய்வதற்கான அனைத்துச் செலவுகளையும் வீவக ஏற்றுக்கொள்ளும் என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!