ஆகச் சிறந்த சிங்கப்பூரர் 2016 விருதை வென்ற ஸ்கூலிங் குடும்பம்

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் ஆகச் சிறந்த சிங்கப்பூரர் 2016 விருதை சிங்கப்பூரின் நட்சத்திர நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங்கின் குடும்பம் வென்றுள்ளது. ஸ்கூலிங் குடும்பத்தைத் தவிர்த்து, இந்த விருதுக்காக மேலும் 11 பேர் முன்மொழியப்பட்டிருந்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் ஜோசஃப் ஸ்கூலிங் புதிய உலகச் சாதனை நேரத்தைப் பதிவு செய்து தங்கம் வென்றார். அதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் சிங்கப்பூரர் எனும் பெருமையை அவர் பெற்றார். விருதுடன் ஸ்கூலிங் குடும்பத்துக்கு $20,000 ரொக்கமும் வழங்கப்பட்டது. போட்டியின் இறுதிச் சுற்று வரைக்கும் வந்த மற்றவர்களுக்குத் தலா $5,000 கிடைத்தது.

ஜோசஃப் ஸ்கூலிங்கின் பெற்றோருக்கு விருதை வழங்கும் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம். அவர்களுடன் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆசிரியர் வாரன் ஃபெர்னாண்டஸ் (இடக்கோடி)

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!