25,000 முதல்40,000 வேலை வாய்ப்புகள்

அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் சிங்கப்பூரில் 25,000 முதல் 40,000 வேலை வாய்ப்புகள் உருவாக்குவதே அர சாங்கத்தின் நோக்கம் என்று மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே தெரிவித்துள்ளார். பொருளியல் மறுசீரமைப்பாலும் மூப்படைந்துவரும் ஊழியரணியா லும் கடந்த இரண்டு ஆண்டுக ளாக வேலைகள் உருவாக்கப் படுவது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது என்றும் திரு லிம் சொன்னார். சாங்கி விமான நிலைய வளா கத்தில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற வேலைச் சந்தையில் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்டுபேசிய அமைச்சர், "ஆண்டுக்கு 100,000 முதல் 120,000 வேலைகள் உரு வாக்கப்பட்ட காலத்தை நாம் மீண் டும் பார்க்க முடியாது. வேலை வாய்ப்புகள் எண்ணிக்கை ஒரு புதிய தளத்தில் நிலைப்படுத்தப் படும்," என்று விவரித்தார். மனிதவள அமைச்சு 2016ஆம் ஆண்டுக்கான வேலை வாய்ப்பு அறிக்கையை வெளியிட்ட ஒரு நாளைக்குப் பிறகு அமைச்சரின் இந்தத் கருத்து வெளியாகியுள் ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!