தைப்பூச பக்தர்களின் நலனில் முழுக்கவனம்

அஷ்வினி செல்வராஜ்

ஆண்டுதோறும் நடைபெறும் தைப் பூசத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற பெரும் திரளாக வருவதுண்டு. இந்தத் தைப்பூசத்தில் அவ்வாறு வரும் பக்தர்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் தங்களுடைய வேண்டு தல்களை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலும் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலிலும் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. அத்தகைய ஏற்பாடுகளை அறிந்து வர தமிழ் முரசு நேற்று பெருமாள் கோயிலுக்குச் சென்றிருந்தது.

ஆலய நிர்வாகக் குழுத் தலைவர் டாக்டர் வெள்ளையப்பன் கூறுகையில், "சென்ற ஆண்டு தைப்பூசத்தின் போது பக்தர்கள் எங்களுக்கு நிறைய ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதேபோல், இந்த ஆண்டும் அவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம். சென்ற ஆண்டு ஒன்பது இசைக் கூடங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், பக்தர்களின் ஒத்துழைப்பு எங்களுக்குக் கிட்டியதால் அந்த எண்ணிக்கை இவ்வாண்டு இரு பத்து மூன்றாக உயர்ந்துள்ளது. இந்த இசைக்கூடங்கள் தண்ணீர் பந்தல்களாகவும் செயல்படும்.

ஆலயத்தின் சிறப்பு கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் தைப்பூச ஏற்பாடுகளின் நிலவரத்தைப் பார்வையிடுகிறார் டாக்டர் கே. வெள்ளையப்பன் . படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!