வாம்போ டிரைவில் உள்ள பிரபல வாம்போ மக்கான் பிளேசில் நேற்று ஓர் உணவுக் கடையில் தீ மூண் டது. ஹை லக்ஸ்மி நாசி லெமாக் என்ற கடையில் தீ மூண்டதைக் காட்டும் படமும் காணொளியும் நேற்று பிற்பகல் நேரத்தில் சமூக ஊடகத்தில் வலம் வந்தன. தண்ணீரைப் பீய்ச்சி தீயை மூன்று பேர் அணைத்ததையும் காணொளி காட்டியது. எண் 9-0 வாம்போ டிரைவ் உணவுச் சந்தை யில் தீ மூண்டிருப்பதாகப் பிற்பகல் சுமார் 1.35 மணிக்குத் தனக்குத் தகவல் கிடைத்தது என்று சிங்கப் பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
வாம்போ டிரைவில் உள்ள பிரபல வாம்போ மக்கான் பிளேஸ் ஸ்டால் கடையில் தீ ஏற்பட்டதைக் காட்டும் படங்களும் காணொளியும் சமூக வலைத் தளங்களில் நேற்று வலம் வந்தன. படம்: ஃபேஸ்புக்