ஊழியர் பற்றாக்குறையைச் சமாளிக்க பாலர்பள்ளிகள் பொது சமையல்கூட திட்டம்

மனிதவள சவால்களை எதிர் கொள்ள சில பாலர்பள்ளி நிலை யங்கள் சிறுவர்களுக்கு உணவு வழங்க ஒட்டுமொத்த உணவு தயாரிப்பு மையத்துடன் பணியாற்றி வருகின்றன. ஒவ்வொரு நிலையமும் சொந்த மாக சமையற்காரர்களைப் பணி யில் சேர்க்க தேவை இருக்காது. அதற்குப் பதிலாக உணவு தயா ரிப்பு மையம் உணவைச் சமைத்து அதைப் பாலர்பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கும். சமையலறை ஊழியர்களைப் பணியில் சேர்த்து அவர்களைத் தக்கவைப்பது பாலர்பள்ளிகளுக்கு நீண்டகால பிரச்சினையாக இருந்து வருகிறது. எனவே, இப் புதிய அணுகுமுறை மனிதவள பற்றாக்குறையைச் சமாளிக்க உதவும். குழந்தைகளுக்கும் சிறு வர்களுக்கும் உணவு தயாரித்து பரிமாறும் சேவையைப் பார்க்க 'டுவிங்கள்கிட்ஸ்@ பெண்டமியர்' பாலர்பள்ளிக்கு மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே நேற்று வந்திருந்தார்.

'டுவிங்கள்கிட்ஸ்@பெண்டமியர்' பாலர் பள்ளியில் சிறுவர் ஒருவர் உணவு சாப்பிடுவதை மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே புகைப்படம் எடுக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!