தெம்புசு மரம் விபத்து: நண்பரைக் காப்பாற்றியவரின் தோள்பட்டை பிசகியது

பூமலையில் சென்ற சனிக்கிழமை 270 ஆண்டுகள் பழமையான தெம்புசு மரம் விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மூவரில் ஒருவருக்கு தோள்பட்டை பிசகியது. நண்பருக்கு உதவச் சென்ற 26 வயது குமாரி டே பெய் லெயின் தோள்பட்டை பிசகியது. சம்பவம் நடந்தபோது குமாரி டேயும் அவரது நண்பர் களும் மரத்தின் அடியில் அமர்ந்திருந்தனர். திடீரென பெரும் சத்தம் ஒன்றை கேட்டு திரும்பிய குமாரி டே, தங்கள் திசையை நோக்கி மரம் சாய்வதைக் கண்டார். உடனே தனது நண்பரை அந்த இடத்திலிருந்து இழுத்தார். அதில் அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. தேசிய பல்கலைக்கழக மருந்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!