அமைச்சர் இங்: கசப்பான, பயன்மிகு படிப்பினை

ஜப்பானிய ஆட்சிக் காலத்தின் போது சிங்கப்பூர் பெற்ற கசப்பான அனுபவங்கள் பின்னர் பயன்மிகு படிப்பினையாக மாறி, நாடு ஒரு வலுவான தற்காப்புப் படையைக் கொண்டிருக்க வழி வகுத்துள்ளது என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் ஜப்பானிய ஆட் சிக்கு உட்பட்ட 75வது ஆண்டு நிறைவு இன்று அனுசரிக்கப்படும் வேளையில் டாக்டர் இங் நேற்று இந்தக் கருத்தை வெளியிட்டார். "இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர் நம்மை ஆட்சி செய்த மூன்றரை ஆண்டுகளில் நாம் இரு கசப்பான, அதே வேளை யில் முக்கிய படிப்பினையைப் பெற்றோம். "ஒன்று, உன்னைத் தற்காக்க மற்றவர்களை நாடக்கூடாது. இரண்டு, வலுவாக உள்ளவர்கள் தாங்கள் செய்ய நினைத்ததைச் செய்வார்கள். வலுவில்லாதவர்கள் ஒன்று செய்ய முடியாமல் துன்புறு வார்கள்," என்று டாக்டர் இங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரி வித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!