நாயின் கழுத்தை நெரித்ததாகவும் கத்தியால் குத்தியதாகவும் குற்றச்சாட்டு

தன் வளர்ப்பு நாயின் கழுத்தை நெரித்து அதைக் கொலை செய்ததாகவும் நாயைக் கத்தியால் குத்தியதாகவும் சூங் சூம் கியாட், 39, என்ற தினக்கூலி தொழிலாளி மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. அவர் 2016 அக்டோபர் 30ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்கும் 5 மணிக்கும் இடையில் தனது ஹவ்காங் அவென்யூ 8 அடுக்குமாடி வீட்டில் தன் பெண் நாயைத் துணியாலும் நாய் வாரைக்கொண்டும் கழுத்தை நெரித்ததாகவும் கத்தியால் அதைக் குத்தியதாகவும் கூறப்படுகிறது. அவர் வேளாண், உணவு கால்நடை ஆணைய உரிமம் இல்லாமல் அந்த நாயை மூன்று மாதத்திற்கும் அதிக காலம் வைத்திருந்ததாகவும் இரண்டாவது குற்றச்சாட்டு கூறுகிறது. இந்த வழக்கு மார்ச் 1ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்திற்கு வரும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!