பணிப்பெண் மீது கொலைக்குற்றம்

தனது 78 வயது முதலாளியைக் கொலை செய்ததாக இந்தோனீசிய பணிப்பெண் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது. தெம்பனிஸ் ஸ்திரீட் 22ல் இருக்கும் புளோக் 276ல் உள்ள தன்னுடைய வீட்டில் திருமதி டே குவீ லாங் என்ற அந்த முதிய சக்கர நாற்காலி மாது இறந்து கிடந்தார். அவருடைய கழுத்தில் கத்திக்குத்து காயம் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நிகழ்ந்து இரண்டு நாட்கள் கழித்து மினா, 37, என்ற அந்தப் பணிப்பெண் மீது மத்திய சேம நிதி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது.

திருமதி டே, தனது தெம்பனிஸ் வீட்டில் தன் கணவருடன் வசித்து வந்தார். அந்த வீட்டில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் சுமார் 2.10 மணிக்கு அந்த முதிய மாதுக்கு மரணத்தை ஏற்படுத்திவிட்டதாக பணிப்பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சம்பவம் நிகழ்ந்தபோது திருமதி டேயின் கணவர் வீட்டில் இல்லை. குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெண்ணின் மனநிலையைப் பரிசோதிப்பதற்காக அவர் விசாரணைக் காவலில் வைக்கப்படுவார். மார்ச் 8ஆம் தேதி பணிப்பெண் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலையாவார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!