நீச்சல் குளத்திற்கு வந்த உடும்பு

ஜூரோங் ஈஸ்ட் நீச்சல் குளத்தில் உடும்பு ஒன்று நீந்துவதை எனுல் யுகிபுக்கி என்பவர் காணொளிப் படம் பிடித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். 41 வினாடி ஓடக்கூடிய அந்தக் காணொளிப்படத்தை ஃபேஸ்புக் பயனீட்டாளர்கள் 3,000 முறை பகிர்ந்துகொண்டுள்ளனர். தண்ணீரில் ஏதோ ஒரு பிராணி நெளிந்து நெளிந்து செல்வதைப் பார்த்த எனுல், அது பெரிய எலியாக இருக்கக்கூடும் என்று கருதி, இணையத் தளத்தில் எலி என்று குறிப்பிட்டிருந்தார். அந்தக் காணொளிப் படத்தைப் பார்த்த மற்ற ஃபேஸ்புக் பயனாளர்கள் அது ஓர் உடும்பு என்று கண்டுபிடித்து திருத்தினர். நேற்று முன்தினம் பிடிக்கப் பட்டு ஃபேஸ்புக் பக்கத்தில் பதி வேற் றம் செய்யப்பட்ட அந்தக் காணொளி இப்போது டுவிட்டர், வாட்ஸ்அப் என பல சமூக ஊட கங் களில் பவனி வந்த வண் ணம் உள்ளது. நீச்சல் குளங்களில் உடும்புகள் போன்ற ஊர்வன வருகை தரு வது இது முதல் முறையல்ல. 2014ஆம் ஆண்டில் தோ பாயோ நீச்சல் குளத்திலும் பாசிர் ரிஸ் கொண்டோமினிய நீச்சல் குளத் திலும் பாம்புகள் காணப்பட்டன.

ஜூரோங் ஈஸ்ட் நீச்சல் குளத்தில் நீந்திய உடும்பு. படம்: எனுல் யுகிபுக்கி/ஃபேஸ்புக்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!