ஜப்பானிய போர் ஆக்கிரமிப்புக் காலத்தை காட்டும் கண்காட்சி

சிங்கப்பூரில் முழுமைத் தற்காப்பு நாளை நினைவுகூரும் வகையில் நேற்று சிங்கப்பூர் டிஸ்கவரி நிலை யத்தில் ஒரு கண்காட்சி தொடங் கியது. உலகப்போரின்போது சிங்கப்பூரில் மக்கள் அடைந்த பாதிப்புகளையும் சிங்கப்பூர் இப்போது எதிர்நோக்கும் மிரட்டல் களையும் அந்தக் கண்காட்சி வெளிச்சம்போட்டு காட்டுகிறது. 'ஒன்றாகச் சேர்ந்து இன்னும் வலுவடைவோம்' என்ற அந்தக் கண்காட்சியை கல்வி அமைச்சர் (பள்ளிகள்) இங் சீ மெங் நேற்று தொடங்கி வைத்தார். சிங்கப்பூரின் தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் தொழில்நுட்பக் கல்விக்கழக கிழக்குக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அவர்களிடம் உரையாற்றிய அமைச்சர், ஜப்பானிய ஆக்கிரமிப் பின்போது தன் குடும்பம் அனு பவித்த சோதனைகளை மாணவர் களுடன் பகிர்ந்துகொண்டார்.

டிஸ்கவரி நிலையத்தில் நடைபெறும் கண்காட்சியில் தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்திப் பார்க்கும் மாணவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!