புகார்களை ஏற்க மறுத்த ரிவர் வேலி குழந்தைப் பராமரிப்பு நிலையம்

தனது பராமரிப்புக்குக் கீழ் இருந்த பிள்ளைகளைக் கொடுமைப்படுத்தி யதாக முன்வைக்கப்பட்ட புகார் களை ரிவர் வேலி வட்டாரத்தில் உள்ள சேம்'ஸ் ஆரம்பகால கற்றல் நிலையம் மறுத்துள்ளது. நிலையத்தின் முன்னாள் ஊழி யர் ஒருவர் தனது அதிருப்தியை வெளிக்காட்டும் விதமாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று 'வீ சேட்' சமூக ஊடகத்தில் புகைப் படங்களைப் பதிவேற்றம் செய்த தாக ஜாலான் முத்தியாராவில் உள்ள நிலையம் நேற்று வெளி யிட்ட செய்தி அறிக்கையில் தெரி வித்தது. நிலையத்தில் பிள்ளைகள் மெத்தைகள் இல்லாமல் தரையில் படுத்துக் கிடந்ததையும் சமைய லறையில் பழங்கள் இருந்ததையும் படங்கள் காட்டின. கெட்டுப்போன பழங்கள் பிள்ளைகளுக்கு வழங் கப்பட்டதாக பட விளக்கத்தில் கூறப்பட்டிருந்தது.

விவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!