உலகின் மிக முக்கியமான 17 நகர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கை யில், சிங்கப்பூரில்தான் பச்சைப் பசேல் என்று தாவரவளம் அதிக மாகவும் அடர்த்தியாகவும் இருக் கிறது. இணையத்தில் கலந்து உற வாடுவதற்கான ஓர் இணையத் தளம், உலக நகர்கள் எந்த அள வுக்குப் பசுமையாக இருக்கின்றன என்பதை அளவிட்டு, பட்டியலிட்டு வருகிறது. அந்தப் பட்டியலில் இடம்பெற்று இருக்கின்ற ஒரே ஓர் ஆசிய நகரம் சிங்கப்பூர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரீபீடியா (Treepedia) என்ற இணையத்தளம் சென்ற ஆண்டு டிசம்பரில் இந்தப் பட்டியலை வெளியிட்டது.
தாவரவளம் மண்டி இருக்கும், அடர்ந்து இருக்கும் நகராக சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. இயோ சூ காங் ரோடு நெடுகில் மஞ்சள் பூக்கள் குலுங்கும் மரங்கள். படம்: தேசிய பூங்காக் கழகம்